வாடும் மனம் வாசம் பெறும் அம்மா சொல்லும் ஒரு சொல்லில்...!

Su.tha Arivalagan
May 10, 2026,07:45 PM IST
- தா. சிலம்பரசி

அம்மா என்றால்
அன்பின் வடிவம்...
அழுகை கேட்டால்
துடிக்கும் பந்தம்...

கண்ணீரைத்
துடைக்கும் 
முதல் கையே...
கனிவால் சூடேற்றும்
ஒளி மதியே...

பரந்த மனமே... 
பாசத்தின் புகலிடமே...
உயிர்களின்
குலவிளக்கே...
உறவுகளின்
மணி மகுடமே...



வாடும் மனம் 
வாசம் பெறும்
அம்மா சொல்லும் 
ஒரு சொல்லில்...

உலகம் முழுதும் தூரமெனினும்
உம் நெஞ்சே எனது
திருக்கோவில்.....

இன்று மட்டும் அல்ல
அன்னையே...
நாள் தோறும் 
உந்தன் நாட்கள்....

என்றும் 
அன்னையை
வணங்கி மகிழ்வோம்...

அன்னையர் தின வாழ்த்துகள்...

(தா. சிலம்பரசி வேலூர் மாவட்டம் மேல்மணவூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராக 13 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஆன்லைன் வகுப்புகள், செயல் ஆராய்ச்சி, 3D மற்றும் AI தொழில்நுட்பம், விளையாட்டு வழிக் கற்றல், மின்னணு மதிப்பீடு போன்ற நவீன முயற்சிகளின் மூலம் தொடக்க நிலை மாணவர்களை ஆர்வமுடன் கற்றலில் ஈடுபடுத்தி, தமிழ்நாடு அரசின் எண்ணும் எழுத்தும் திட்டத்தின் கீழ் தொழில்நுட்பக் கல்வி முன்னேற்றத்தில் சிறப்பான பங்களிப்பு செய்துள்ளார். தமிழின் மீது கொண்ட ஆர்வத்தால் தமிழ்நாடு அரசின் ஊஞ்சல், தேன் சிட்டு, கனவு ஆசிரியர் இதழ்களில் மாவட்ட ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு, மாணவர்களின் கதை, கவிதை, ஓவியம், கட்டுரை போன்ற படைப்பாற்றல் திறன்களை வளர்த்துள்ளார். இவரின் சிறந்த கல்விச் சேவையைப் பாராட்டி, தமிழ்நாடு அரசு 2025 ஆம் ஆண்டு டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது வழங்கி கௌரவித்துள்ளது)