இப்படிப் பொங்க வைக்கிறாயே!
Jan 08, 2026,03:52 PM IST
- பா. பானுமதி
ஒரு பொங்கல் திருநாளில் நாம் சந்தித்தோம்....
உன் கண்களில் புத்துணர்ச்சி பொங்கியது
என் கண்களில் புது உணர்ச்சி தங்கியது
வார்த்தைகள் பின் வாங்கியது
வசீகரமே முன்னோங்கியது
கரும்பாய் இனித்தது
உன் வாய் சொற்கள்
வெல்லமாய் இருந்தது
உன் வேலைகள் சூரியனாய் என்னை சுட்டெரிக்க
தொடர்ந்து வந்தேன்
துணை வேண்டி நின்றேன்
நாளும் வேளையும் கூடி வர
பொங்கல் திருநாள் நம் மண நாளாகியது
முதல் பொங்கல் மூச்சிரைக்க இனிமை கொட்டியது
அடுத்த பொங்கல் அற்புதமாய் அமைந்தது
தொடர்ந்த பொங்கல்கள் என்னை தூக்கி தெறிக்க வைத்தது
இதோ ஒரு பொங்கல் வருகிறது...
தினமும் என்னை பொங்க வைக்கிறது
புறப்பட்டு வருகிறாயா பொங்கலே
உனக்கு போக்கிடம் இல்லையா
இப்படி பொங்க வைக்கிறாயே
உனக்கு இரக்கமே இல்லையா
கரும்பு கசக்கிறது
வெல்லம் இளிக்கிறது
சூரியன் சுடுகிறான் !