தை மாதம் பிறந்தது பொங்கலோ பொங்கல் .. பொங்கலோ பொங்கல் !
- ந. தீபலட்சுமி
தை மாதம் பிறந்தது பொங்கலோ பொங்கல்
புது வாழ்வு மலர்ந்தது பொங்கலோ பொங்கல்
தை மாதம் பிறந்தது பொங்கலோ பொங்கல்
புது வாழ்வு மலர்ந்தது பொங்கலோ பொங்கல்
தமிழர்களின் திருநாளாம் பொங்கலோ பொங்கல்
உழவர்களின் புது நாளாம் பொங்கலோ பொங்கல்
ஏழைகளின் வளநாளாம் பொங்கலோ பொங்கல்
ஏற்றங்கள் பல காண்போம் பொங்கலோ பொங்கல்
தை மாதம் பிறந்தது பொங்கலோ பொங்கல்
புது வாழ்வு மலர்ந்தது பொங்கலோ பொங்கல்
புது நெல்லு புது பானை பொங்கலோ பொங்கல்
பானையிலே பால் பொங்கும் பொங்கலோ பொங்கல்
சூரியனின் அருள் பெருகும் பொங்கலோ பொங்கல்
வயல் எல்லாம் வளம் காணும் பொங்கலோ பொங்கல்
தை மாதம் பிறந்தது பொங்கலோ பொங்கல்
புது வாழ்வு மலர்ந்தது பொங்கலோ பொங்கல்
ஊரெங்கும் கொண்டாட்டம் பொங்கலோ பொங்கல்
உறவினரின் உபசரிப்பே பொங்கலோ பொங்கல்
மண் மணக்கும் கூட்டாஞ்சோறு பொங்கலோ பொங்கல்
காளைகளின் வீரம் பேசும் ஜல்லிக்கட்டை பொங்கலோ பொங்கல்
தை மாதம் பிறந்தது பொங்கலோ பொங்கல்
புதுவாழ்வு மலர்ந்தது பொங்கலோ பொங்கல்
சாதி மதம் பார்ப்பதில்லை பொங்கலோ பொங்கல்
உயர்ந்தோர் தாழ்ந்தோர் இங்கில்லை பொங்கலோ பொங்கல்
பெரியோர் சிறியோர் வயதில் இல்லை பொங்கலோ பொங்கல்
அன்பு மட்டும் பொங்கி வழியும் பொங்கலோ பொங்கல்
தை மாதம் பிறந்தது பொங்கலோ பொங்கல்
புது வாழ்வு மலர்ந்தது பொங்கலோ பொங்கல்
அகந்தை ஆசை அழிய வைக்கும் பொங்கலோ பொங்கல்
இணைப்பு ஈகை பெருக செய்யும் பொங்கலோ பொங்கல்
உழைப்பு ஊரைப் போற்றிடுமே பொங்கலோ பொங்கல்
எதிலும் ஏற்றம் காணச் செய்யும் பொங்கலோ பொங்கல்
ஐயம் நீங்கி ஒற்றுமையாய் பொங்கலோ பொங்கல்
ஓங்காரமாய் ஔடதம் இன்றி வாழச் செய்யும் பொங்கலோ பொங்கல்
தை மாதம் பிறந்தது பொங்கலோ பொங்கல்
புது வாழ்வு மலர்ந்தது பொங்கலோ பொங்கல்
தமிழர்களின் திருநாளாம் பொங்கலோ பொங்கல்
உழவர்களின் புது நாளாம் பொங்கலோ பொங்கல்
பொங்கலோ பொங்கல்
பொங்கலோ பொங்கல்
(ந.தீபலட்சுமி, பட்டதாரி ஆசிரியர் -ஆங்கிலம், அரசினர் மேல்நிலைப் பள்ளி , சத்துவாச்சாரி , வேலூர் மாவட்டம்)