கூட்டணி குறித்து தற்போது வரை பாஜகவிடமிருந்து எந்த அழைப்பும் வரவில்லை: பிரேமலதா விஜயகாந்த்!

Su.tha Arivalagan
Jan 21, 2026,05:06 PM IST

சென்னை: கூட்டணி பேச்சுவார்த்தைக்காக தற்போது வரை பாஜகவிடமிருந்து எந்த அழைப்பும் வரவில்லை என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.


இது தொடர்பாக பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகையில், யாருடன் கூட்டணி அமைப்பது என்பது உரிய நேரத்தில் அறிவிக்கப்படும். கூட்டணி பேச்சுவார்த்தைக்காக தற்போது வரை பாஜகவிடமிருந்து எந்த அழைப்பும் வரவில்லை. பியூஷ் கோயல் எதற்காக சென்னை வந்துள்ளார் என்பதுகூட எங்களுக்குத் தெரியாது.




24ஆம் தேதி முதல் பிப்ரவரி 2ஆம் தேதி வரை பிரசாரம் செய்ய இருக்கிறோம். கூட்டணி தொடர்பாக மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசித்து தெரிவிப்போம். தவறான தகவல்களை யார் பரப்புகிறார்கள் என்று புரியவில்லை. தற்போது நான் கட்சி அலுவலகத்தில்தான் இருக்கிறேன். இந்த நிமிடம் வரை அதிமுக–பாஜக கூட்டணி குறித்து எந்த பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை.


அரசியல் என்பது மக்களுக்கானது தான். மதுரையில் எல்ஐசி அதிகாரியாக பணியாற்றிய கல்யாணியை  அவருடன் வேலை பார்த்த ராமகிருஷ்ணன் கொடூரமாக கொலை செய்த சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. தவறை சுட்டிக்காட்டியதற்காக பெட்ரோல் ஊற்றி எரித்தது மனிதாபிமானத்திற்கு முற்றிலும் எதிரான செயல். இதனை எவரும் ஏற்றுக்கொள்ள முடியாது. இது போன்ற சம்பவங்கள் பெண்களின் பாதுகாப்பு குறித்து பெரிய கேள்விக்குறியை எழுப்பியுள்ளது. குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.