2026 இல் மக்கள் நல்ல தீர்ப்பை கொடுப்பார்கள்: தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நம்பிக்கை!
சென்னை: தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 8 அல்லது 9 மாதம் இருக்கிறது. 2026 இல் மக்கள் நல்ல தீர்ப்பை கொடுப்பார்கள் என நம்புகிறேன் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தேமுதிக பிரம்மாண்ட மாநாடு ஜனவரி ஒன்பதாம் தேதி நடைபெறும் எனவும், அதற்கான அறிவிப்பு வெளியிடப்படும் எனவும் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார். இது குறித்து மேலும் அவர் கூறியதாவது,
ஜனவரி மாதம் கடலூரில் ஒன்பதாம் தேதி தேமுதிகவின் மாபெரும் மாநாடு நடைபெறும். அந்த மாநாடு மிகப்பெரிய அறிவிப்பாக இருக்கும். ED ரைடு நடைபெறுவது புதிது அல்ல. இது வழக்கமாக நடைபெறுவது ஒன்றுதான். நிச்சயமாக யார் தப்பு செய்கிறார்களோ அவர்கள் தண்டிக்கப்படுவார்கள். இதில் மாற்றுக்கருத்துக்கு ஒன்றும் இல்லை. மக்கள் வரிப்பணத்தை லஞ்சமாகவோ, ஊழலாகவோ பயன்படுத்தினால் கட்டாயமாக தண்டனை அனுபவிக்க வேண்டும். அதனால் ED ரெய்டு வருகிறார்கள். ஆனால் அதற்குப் பிறகு என்ன நடக்கிறது என்று தெரியவில்லை. அதன் உண்மை நிலை என்ன என்று மக்களுக்கு தெரிய வேண்டும். கேப்டன் சொன்ன மாதிரியே லஞ்சம், ஊழல் இல்லாத நல்ல ஆட்சி அமைய வேண்டும்.
ஒரு தனி நபரின் வழக்கை அரசுக்குள் கொண்டு செல்லக்கூடாது. விசாகன் ராஜா மீது தான் ஆயிரம் கோடி ஊழல் வழக்கு எழுந்துள்ளது. அதனால் ஒரு தனிநபரின் வழக்கை அரசுக்குள் கொண்டு செல்லக்கூடாது. காத்திருந்துதான் செயல்படுத்த வேண்டும். அவசரப்படுத்தக் கூடாது. கொடுத்த பல வாக்குறுதிகளை இன்னும் திமுக நிறைவேற்றாமல் தான் இருக்கிறார்கள். ஆயிரம் ரூபாய் திட்டங்களால் பெண்களை இன்று பிரைன் வாஷ் பண்ணி அந்த ஓட்டை வாங்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். இளைஞர்கள் இன்று அதிக அளவில் பாதிக்கப்படுவது டாஸ்மாக் தான். அதனால்தான் இன்று பலவிதமான கொலைகள், கொள்ளைகள், பழிவாங்கல், பாலியல் வன்கொடுமை, உள்ளிட்ட பல சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கிறது. அவர்கள் கொடுத்த வாக்குறுதிகள் நீட் ரத்து, விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துதல், டாஸ்மார்க் ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் இன்னும் செயல்படுத்தாமல் தான் இருக்கிறது. தேர்தலுக்கு இன்னும் எட்டு,ஒன்பது மாதம் இருக்கிறது. பொருத்திருந்து பார்ப்போம். இந்த அரசு என்ன செய்கிறது என்று. 2026 இல் மக்கள் நல்ல தீர்ப்பை கொடுப்பார்கள் என நம்புகிறேன்.
அவங்க கட்சி சார்பாக நிறைய விஷயங்களை செய்திருப்பார்கள். அதுதான் சாதனையில் கூறியிருப்பார்கள். இது மக்கள் சொல்வது கிடையாதே. அவங்க கட்சி சார்பாக அவங்க சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் சொல்லியிருப்பார்கள் அது இயல்பு தானே. கூட்டணி அமைத்த பிறகு சலசலப்பு ஏற்பட்டால் பிரிவதற்கே வாய்ப்புள்ளது. கூட்டணி அமைத்தபின் ஆட்சி அமைக்கும் நிலைப்பாட்டை தான் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். ஜனவரி ஒன்பதாம் தேதி திமுகவின் மாநாடு குறித்த அறிவிப்பு வெளியாகும் என கூறினார்.