ஆழித் தேராக அசைந்து வரும் உந்தன் அழகைப் பார்த்து!
Sep 22, 2026,04:25 PM IST
- கவிஞர் பிஎஸ் முருகேசன், திண்டுக்கல்
செல்லமே செல்லமே
சின்னக் குயிலே
சிலை போல் வந்த
வண்ண மயிலே
ஆழித் தேராக
அசைந்து வரும்
உந்தன் அழகைப் பார்த்து
ஆசை வரும்
அரும்பு மீசை
மச்சானுக்கு
ஆள வட்டம்
போட வரும்
கரும்பு தேடி
எறும்பு வரும்கன்னி உன் மேல்
காதல் வரும்
எண்ணி எண்ணி
ஏக்கம் வரும்
இரவில் எங்கே
தூக்கம் வரும்
பாவை உந்தன்
பார்வை பட்டால்
பாலை நிலமும்
சோலை ஆகும்
சோலை வனமும் தென்றலுக்கு
ஜோராய் தானே
வழி கொடுக்கும்
பாரா முகமாய்
போறவளே
பார்வதி வீட்டு
குல மகளே
போகும் பாதை
சரி தானா
பொண்ணே இதுவும்
முறை தானா
பார்த்து பார்த்து
நான் ரசித்தேன்
பாவை உனக்கு
வலை விரித்தேன்
தேவை என்றால்
திரும்பி விடு
இல்லையேல் விருப்பம்
போல ஓடிவிடு
இழந்தால் அதுவே
அவமானம்
மானே தேனே
மனம் மாறு
மண்ணுக்கும் பெண்ணுக்கும்
புகழ் சேரு
(கவிஞர் பிஎஸ் முருகேசன், திருநூத்துப்பட்டி, செந்துரை)