மிடுக்கான பார்வை கண்டு திடுக்குன்னு தான் விழிக்கிறேன்!

Su.tha Arivalagan
Sep 02, 2026,01:24 PM IST

- கவிஞர் பி.எஸ். முருகேசன்


கனவில் வந்த தேவதையை

காண எண்ணி ஓடுகிறேன்


தொட்டுவிட்டு போனவளை

தொலைத்த இடம் தேடுகிறேன்


பட்டு வண்ண 

மேனி அவள்


பாத்த இடம் 

தெரியலே


விட்டு விட்டு 

போன அவளின்


விவரம் ஒன்னும் 

புரியலே




நிலவு போல 

தேய்கிறேன்


நிம்மதி தான் 

கிடைக்கலே


நித்தம் நித்தம் 

நினைவில் வந்தும்

நெனச்சது நடக்கலே


பகலில் தோன்றும் 

வானவில்லை


பார்க்க மனம் 

ஏங்குதே


பார்த்து படம் 

பிடிக்கும் முன்னே


படக்குன்னு தான் 

மறையுதே


சொடுக்குப் போட்ட 

சுந்தரியே


சொப்பனத்தில் பார்க்கிறேன்


மிடுக்கான பார்வை கண்டு


திடுக்குன்னு தான் 

விழிக்கிறேன்


கனவில் வந்த கன்னிக்குத் தான்


காதல் வலை விரிக்கிறேன்


காரிகையை கைபிடித்து 

கல்யாணம் முடிக்கிறேன்


(கவிஞர் பிஎஸ் முருகேசன், திருநூத்துப்பட்டி, செந்துரை)