கட்டுமரம் வாழ்க்கை!
Oct 22, 2026,10:41 AM IST
- கவிஞர் பி. எஸ். முருகேசன், திண்டுக்கல்
கொட்டும் மழையிலும்
கும்மிருட்டு வேலையிலும்
கட்டுமரம் ஏறி
கடலிலே மீன் பிடிக்க
அடிக்கும் அலையில்
அசைத்து விடும் காற்றிலும்
உயிரையும் துச்சமென
உறவுகளைத் தவிக்க விட்டு
இரவெல்லாம் கண்விழித்து
இயன்றவரை மீன் பிடித்து
கதிரவன் உதிக்கும் முன்னே
கரை வந்து சேர்ந்திடுவர்
உயிரைப் பணயம் வைத்து
உழைத்துப் பிடித்த மீனைக்
குறைத்து விலை கேட்பார்
குணம் இல்லாத வியாபாரி
இரக்கம் கொள் மனிதா
ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண
(கவிஞர் பிஎஸ் முருகேசன், திருநூத்துப்பட்டி, செந்துரை)