தேனும் மருந்தாகும் தித்திக்கும் விருந்தாகும்!

Su.tha Arivalagan
Aug 17, 2026,03:26 PM IST

- கவிஞர் பி.எஸ்.முருகேசன்


புத்தம் புது 

மலர் தேடி


நித்தம் நித்தம்

தேனீ வரும்


சத்தமிட்டு கூட்டமாக 

சரிகம பாடி வரும்


கொஞ்சம் கொஞ்சம் 

தேன் எடுத்து


கொண்டு வரும் 

தேன் கூடு


மகரந்தச் சேர்க்கை 

மாற்றம் கண்கூடு




மொத்தமாக சேர்த்து வைக்கும் தேனீக்கள் பண்பாடு


தேனை எடுப்பதற்கு 

மனிதன் படும்பாடு


திரண்டு விரட்டி விடும் 

தேனீக்கள் முனைப்போடு


முரண்டு பிடிப்பதில்லை 

முன்னேறும் ஒன்றாக


ஒற்றுமைக்கு இலக்கணமாய் 

ஒன்று படும் நன்றாக


உழைப்பின் சிகரத்திலே 

உயர்ந்தது தேனீக்கள்


ராணியின் தலைமையிலே

ரம்மியமாக கூடும்


வட்டமாக வீடு கட்டி 

வனப்புடனே வாழும்


தேனும் மருந்தாகும் 

தித்திக்கும் விருந்தாகும்


நாமும் கத்துக்கணும் 

தேனீயின் பாடம்


நலமுடன் இருக்கும்

நம்மோட வீடும்


(கவிஞர் பிஎஸ் முருகேசன், திருநூத்துப்பட்டி, செந்துரை)