காத்திருக்கிறேன் உனக்காக .!

Su.tha Arivalagan
Aug 12, 2026,02:51 PM IST

- கவிஞர் பி.எஸ். முருகேசன்


கம்மங் கதிர் அறுத்து 

களம் கொண்டு போர புள்ளே


கதிர் அடிக்க 

நா வாரேன்


களத்து மேட்டில் 

போடு புள்ளே


தடியால் அடிச்சு கம்பை 

தனியா பிரிச்சுடுவோம்


சொங்கு அரிச்சா

சொல்லு புள்ளே


சொருஞ்சு விட

நா வாரேன்




சொல்லாமே நீ சொருஞ்சா

சுகமும் கிடைக்காது


உடம்பில் சொறி 

விழும் தப்பாது


கம்பு இடிச்சு 

கூழ் கிண்டி


காலையிலே மோர் 

கலந்து


ஊறுகாய் தொட்டு கிட்டு 

ஒரு கிண்ணம் குடிச்சவங்க


நோய் நொடிகள் 

இல்லாமே 

நூறாண்டு வாழ்ந்தாங்க


உரல் உலக்கை இல்லை 

உரல் இடிக்க தெம்பு இல்லை


ஊரோடு நாம் சேர்ந்து 

உழைக்கணுமே வாடி புள்ளே


துணைக்கு வந்து சேரும்

புள்ளே

நான் உனக்காக காத்திருக்கிறேன்


(கவிஞர் பிஎஸ் முருகேசன், திருநூத்துப்பட்டி, செந்துரை)