மலரும் பூக்கள் சிரிக்குதே

Su.tha Arivalagan
Aug 14, 2026,03:05 PM IST

- கவிஞர் பி.எஸ் முருகேசன்


மலரும் பூக்கள் சிரிக்குதே 

புலரும் காலைப்பொழுதுலே


அகண்டு விரிந்து வளருதே 

ஆலமரம் விழுதுலே


கார்முகிலும் குளிர்ந்து தான் வானம் மழை பொழியுது


கணக்கில்லா வெள்ளம் 

வந்தும் 

கடல் எங்கே வழியுது


கண்டதெல்லாம் உண்டாலும் 

காகம் எங்கே பெருக்குது


எத்தனையோ கனவு வரும் 

எதுதான் இங்கே பலிக்குது




கவலைகளை எண்ணி எண்ணி மனதும் ரொம்ப 

வலிக்குது


காற்றும் கூட மறைந்து வந்து சுழன்று சுழன்று அடிக்குது


வெயிலும் கூட வெகுநாட்கள் 

வெப்பம் ரொம்ப கக்குது


வேலை இல்லா திண்டாட்டம் 

வேகம் எடுத்து கிளம்புது


வேதனையில் வெகுஜனங்கள் 

விடியலைத் தான் தேடுது


விடியுமா வறுமை மடியுமா 

விடை தான் எங்கே? 


விழி பிதுங்கி நிக்குது


(கவிஞர் பிஎஸ் முருகேசன், திருநூத்துப்பட்டி, செந்துரை)