தோஷங்கள் தொற்றிட தேசங்கள் தோற்றது மண்ணே
Jul 17, 2026,02:21 PM IST
- கவிஞர் பி.எஸ். முருகேசன்
பாசம் இருந்தது முன்னே
உண்மை பாசம் இருந்தது முன்னே
பாசங்கள் எல்லாமே
வேசங்கள் ஆகி
மோசமாய் போனது பின்னே
தோஷங்கள் தொற்றிட
தேசங்கள் தோற்றது மண்ணே
கோசங்கள் ஓங்குது
நேசங்கள் தேயுது
நிம்மதி போனது கண்ணே
மனம் நிம்மதி போனது கண்ணே
மாற்றங்கள் எப்போது
மாறிடப் போகுதோ
மனித நேயம் வளர்ந்திட
கண்ணே
(கவிஞர் பிஎஸ் முருகேசன், திருநூத்துப்பட்டி, செந்துரை)