வெயிலும் கொஞ்சம் மூடும் போது மயிலும் வந்து ஆடும்!
Aug 27, 2026,04:33 PM IST
- கவிஞர் பிஎஸ் முருகேசன்
அத்தை மகளே
அள்ளி அணைக்க
ஆசை மாமன்
மனம் நினைக்க
மோகப் பார்வை
வலை விரிக்க
வாடி சேர்ந்து
கதை படிக்க
மேனி குலுக்கி
நடக்கும் புள்ள
மவுனச் சிரிப்பு
சிரிக்கும் புள்ள
தாவணி போட்ட
தங்கப் புள்ள
தாவிக் குதுச்சா
வலிக்கும் புள்ள
நந்தவனம் சோலையிலே
பாடும் குயிலு ராகம்
கேட்க இனிக்கும்
கீதம்
வெயிலும் கொஞ்சம்
மூடும் போது
மயிலும் வந்து ஆடும் தன்
துணையைக் கொஞ்சம் தேடும்
விடியலுக்கு முன்
எழுந்து சேவலும் தான் கூவும்
சீக்கிரமே எழுந்து வாடி
மாமன் நானும் பாவம்
சிறகடித்து பறந்து செல்வோம் காதல் வானில் நாமும்
(கவிஞர் பிஎஸ் முருகேசன், திருநூத்துப்பட்டி, செந்துரை)