விடியலைத் தாடி

Su.tha Arivalagan
Jul 24, 2026,03:23 PM IST

- கவிஞர் பி.எஸ்.முருகேசன்


பாத்தாலும் பாத்தேனடி 

பாதகத்தி ஒன்னே


பம்பரம் போல் சுழன்று வந்து பாதையிலே நின்னேன்


மெத்தையிலே நின்னவளை 

எக்கி எக்கி பாத்தேனே


அத்தை மக

அழகி இன்னு

ஆவலோடு சொன்னேனே


சொத்து சொகம் 

தேவையில்லை 

சொந்தம் நீ போதுமே




தாய்மாமன் பெத்தவளே 

தங்கம் வந்து சேருமே


வங்கக் கடல் அலையும் 

வசந்தம் கூட வீசுமே


சிங்கப் பெண் நீ நடந்தால் 

சிகரமும் போற்றுமே


குடகு மலைத் தென்றலும் 

கொங்கு தமிழ் பேசுமே


தென் பொதிகை சந்தன வாசம்

தெருவெங்கும் மணம் வீசுமே


மண்ணின் மணம் கலந்த 

மலைமகளே மகராசி


மதிப்பில் அடங்காத 

மாணிக்கம் முகராசி


கொள்ளை கொள்ளும் 

மனமே கோடி திரவியமே


ராகத்தில் தோடி 

ரம்மியமாகப் பாடி


விரைந்து நீ வாடி

விடியலைத் தான் தாடி


(கவிஞர் பிஎஸ் முருகேசன், திருநூத்துப்பட்டி, செந்துரை)