மாமன் கூட நடந்து பாரு மகிழ்வுடனே தொடர்ந்து பாரு!
Sep 09, 2026,02:50 PM IST
- கவிஞர் பி.எஸ்.முருகேசன்
வனத்திலே தான் மானு
மரத்திலே தான் தேனு
வாடி புள்ளே பானு
அழைக்கிறேன் நானு
தேனை எடுத்து
குடிக்கத் தாரேன்
மானைப் புடுச்சு
வளர்க்கப் போறேன்
மாமன் கூட
நடந்து பாரு
மகிழ்வுடனே தொடர்ந்து
பாரு
ஆத்து நீரை
குடிச்சு பாரு
அள்ளிப் பருகி
தாகம் தீரு
ஆலமரம் நெழலில்
கொஞ்சம்
அமர்ந்து நீயும்
இருந்து பாரு
பறவை இடும்
சத்தம் கேளு
பாவை நீயும்
நித்தம் கேளு
வெயிலின் வெப்பம்
தணியும் பாரு
மயிலக் கொஞ்சம்
பக்கம் பாரு
தூக்கம் வந்து
சொக்கும் பாரு
துணியை விரிச்சு
படுத்துப் பாரு
இயற்கை அன்னை
தாலாட்டு
இனிமை தரும்
சீராட்டு
மனம் மகிழ்ந்து
பாராட்டு
(கவிஞர் பிஎஸ் முருகேசன், திருநூத்துப்பட்டி, செந்துரை)