கக்கத்திலே குடம் தூக்கி கண்மாய்க்குப் போற புள்ளே!

Su.tha Arivalagan
Jul 13, 2026,12:42 PM IST

- கவிஞர் பி.எஸ்.முருகேசன்


கக்கத்திலே குடம் தூக்கி கண்மாய்க்குப் போற புள்ளே

வெக்கத்திலே தலை குணுஞ்சு வேகமாக போறியடி


பக்கத்துல காவலுக்கு 

பாதுகாப்பா நா வரவா


தண்ணீரை தூக்கி வந்து 

தங்கத்துக்கு நான் தரவா


எட்டு வச்சு போறியடி 

ஏண்டி ரொம்ப வேகமா




கட்டுச்சோறு கொண்டு வாரேன் 

கண்ணே கொஞ்சம் பாரம்மா


தள்ளி நீயும் போகாதே 

தங்கமே இன்னும் தூரமா


கொஞ்ச நேரம் உக்காரு 

குளிர்ந்த நிழல் ஓரமா


சேர்ந்து நாமும் சாப்பிடுவோம் 

சாதம் ரொம்ப ஜோர் அம்மா


பாசத்தோடு பேசிடுவோம் ரெண்டு பேரும் தீரமா


குடம் அலம்பி சேலை எங்கும் ஆகுமே ஈரமா


காஞ்சிபுரம் பட்டுச்சேலை வாங்கி நானும் தாரேமா


எவன் வந்தாலும் பாத்துக்கிறேன் எதிர்த்து தானே வீரமா


நல்ல கணவனாக ஆக்கிக்கிறேன் நானும் உன்னைத் தாரம் மா


விடியலாக வாழ்க்கையும் தான் மிளிரும் இங்கே பாரம்மா


வியந்து வியந்து பார்க்க வேணும் வீதியிலே ஊர் அம்மா


(கவிஞர் பிஎஸ் முருகேசன், திருநூத்துப்பட்டி, செந்துரை)