மலர்ந்து சிரிக்கும் மல்லி நா வாங்கி வாரேன் சொல்லி!
Aug 31, 2026,04:54 PM IST
- கவிஞர் பி.எஸ் முருகேசன், திண்டுக்கல்
வாடி வாடி ஏ கிள்ளி
நீ வளரவில்லை குள்ளி
அணைச்சுகிறேன்டி அள்ளி
நீயும் போக வேணாம் தள்ளி
மலர்ந்து சிரிக்கும் மல்லி
நா வாங்கி வாரேன் சொல்லி
ஆசை தீர அள்ளி
சூடிக் கோடி வில்லி
ஆறடிக் கூந்தல்
வளர்ந்து தொங்குது
அடியே
ஆளுக்கு மேலே
சடையப் பின்னி
மடுச்சுக் கட்டு
அழகா இடுப்புக்கு
கீழே
நடக்கும் போது
தரையில் கூட்டுது
ஆறு முலம்
வண்ணச் சேலை
அடியே நீயும்
நிமிர்ந்து பாத்தா
சும்மா இழுக்கு தேடி
ஆளை
மனசுக்குள்ளே போட்டு
வச்சேன்
மாமன் நானும் கணக்கு
எனக்கு
மாடப்புறா நீயும் கிடைச்சா
மகிழ்ச்சி தான்டி
எனக்கு