அக்., 3ம் தேதி வெள்ளிக்கிழமை பொது விடுமுறை: தமிழக அரசு அறிவிப்பு!
சென்னை: ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை தொடர் விடுமுறையை முன்னிட்டு அக்., 3ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று பொது விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு.
ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜையை முன்னிட்டு அக்., 1, 2 ஆகிய இரண்டு தினங்களுக்கு அரசு விடுமுறை தினங்களாகும். அதன்பின்னர் அக்.,4,5 ஆகிய இரண்டு தினங்களும் சனி மற்றும் ஞாயிறு, இந்நாட்களும் விடுமுறை என்பதால், இடையில் இருந்த 3ம் தேதி வெள்ளிக்கிழமை மட்டும் வேலை நாளாக இருந்தது.
அக்டோபர் 3ம் தேதி ஒருநாள் மட்டும் விடுமுறையாக அரசு அறிவித்தால் 5 நாட்கள் தொடர்ந்து விடுமுறை கிடைக்கும் சூழ்நிலை நிலவும். இந்த தொடர் விடுமுறை காரணமாக தசரா பண்டிகையை அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மகிழ்வுடன் கொண்டாடுவர்கள் என்று அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்நிலையில், அக்., 3ம் தேதி வெள்ளிக்கிழமையை விடுமுறை தினமாக தமிழக அரசு தற்போது அறிவித்துள்ளது. இதனால் அரசு பணியில் இருப்பவர்களுக்கு 5 நாட்கள் தொடர் விடுமுறை கிடைத்துள்ளது. எற்கனவே பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அரசு பணியில் இருப்பவர்களுக்கும் விடுமுறை என்பதால், இந்த 5 நாட்கள் குடும்பத்துடன் இருப்பதற்கான சூழல் உருவாகியுள்ளது.