வெற்றியின் பாதை கஷ்டம்தான் ... அடைந்து விட்டால் வீரன்தான் !

Su.tha Arivalagan
Jan 31, 2026,05:12 PM IST

- க. யாஸ்மின் சிராஜூதீன்


வெளியீடு எளிதில்லை 

உழைப்பின் முழுவடிவம் 

பசி, தாகம் ,அடக்கி...

வியர்வை  சிந்தி ...

தூக்கம்  துறந்து ..

வீட்டை மறந்து ...

அவரவர்  இலக்கு நோக்கி !!!

பல படிகள்  தாண்டி...

முழுவடிவம் தந்து ...

வெளியிடுதல் என்பது ...

கோடி இன்பம் தந்திடும் ...

வெற்றிக்கனியை பறித்திட்டால்....




மகிழ்ச்சிக்கு எல்லை இல்லையே!!!

உழைப்பை என்றும் போற்றிடு !

சோம்பல் தூக்கி  எறிந்திடு !

உந்தன் இலக்கை  அடைந்திடு !

வெற்றியின் பாதை கஷ்டம்தான் ...

அடைந்து விட்டால் வீரன்தான் 

எதுவும் இங்கே எளிதல்ல !

உழைப்பால் பெறாதது எதுவுமில்ல

உழைப்பின்றி  எதுவுமில்லை...

வெளியீடு  என்பது எளிதல்ல 

உழைப்பு உழைப்பு உழைப்புதான்  !!!


(கவிஞர் க.யாஸ்மின் சிராஜூதீன் இடைநிலை ஆசிரியர். ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கரடிக்குப்பம். மேல்மலையனூர் ஒன்றியம் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்.  26.09.2014 முதல் இடைநிலை ஆசிரியராக 11 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். 2 ஆண்டுகளாக கவிதை, சிந்தனை துளிகள், சிறுகதை, வகுப்பறைக்கு பாடங்கள் தொடர்பான பாடல்கள் எழுதி வருகிறார். பிரதிலிபி தளத்தில் கவிதைகளைப் பதிவிட்டு வருகிறார். தொடுவானம் கவிதை குழுமம் நடத்தும்  whatsApp வழியாக  கவிதை எழுதும் போட்டியில் தொடர்ந்து கவிதை எழுதி வருகிறார்)