புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தல் 2026 – பாஜக தேர்தல் அறிக்கை குழு அமைப்பு

Meenakshi
Dec 05, 2025,04:03 PM IST

புதுச்சேரி: புதுச்சேரியில் 2026ம் ஆண்டு நடக்கவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, பாஜக சார்பில் தேர்தல் அறிக்கை குழு அமைக்கப்பட்டுள்ளதாக புதுச்சேரி பாஜக மாநிலத் தலைவர் வி.பி. ராமலிங்கம் தெரிவித்துள்ளார்.


புதுச்சேரியில் 2026ல் நடக்கவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, மாநில வளர்ச்சி நோக்கங்களையும் பொதுமக்களின் எதிர்பார்ப்புகளையும் கருத்தில் கொண்டு, புதுச்சேரி பாஜக மாநிலத் தலைவர் வி.பி.ராமலிங்கம், Ex-MLA அவர்கள் அதிகாரப்பூர்வமாக மாநில தேர்தல் அறிக்கை குழு (State Election Manifesto Committee) அமைக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.




இது குறித்து புதுச்சேரி பாஜக மாநிலத் தலைவர் வி.பி.ராமலிங்கம் கூறுகையில், குழுவின் தலைவர் மாநில சட்டப்பேரவை தலைவர் ஏம்பலம் ஆர்.செல்வம்  தலைமையில் 20 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அவருடன் ராஜ்யசபா உறுப்பினர் செல்வகணபதி இணைந்து செயல்படுவார் என்று தெரிவித்துள்ளார்.  இந்த குழு, புதுச்சேரி மக்களின் தேவைகள், வளர்ச்சி பணிகள் மற்றும் சமூகநல திட்டங்கள் அனைத்தையும் விரிவாக ஆய்வு செய்து, புதுச்சேரியின் எதிர்கால முன்னேற்றத்திற்கான பாஜக தேர்தல் அறிக்கையை தயாரிக்கும் பொறுப்பை ஏற்கிறது என்று தெரிவித்துள்ளார்.


மேலும், பொது மக்களின் கருத்துகள், நிபுணர்களின் ஆலோசனைகள் மற்றும் புதுச்சேரியின் நீண்டகால வளர்ச்சி நோக்கங்களை ஒருங்கிணைத்து, மிகச் சிறந்த மற்றும் செயல்படுத்தக்கூடிய தேர்தல் அறிக்கையை உருவாக்குவதே இந்தக் குழுவின் முக்கிய இலக்காகும் என்றும், அத்துடன் பல்வேறு துறையைச் சார்ந்த நிபுணர்கள் இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.