அம்மா எனும் காதல்!

Su.tha Arivalagan
Sep 22, 2026,04:03 PM IST

- புதுச்சேரி தனலட்சுமி


முகம் தெரியாமலே

எனை சுமந்தவள் நீ,


பெயர் தெரியாமலே

எனை நேசித்தவள் நீ.


உலகம் காதலை

வார்த்தையில் தேடும்,


நீயோ காதலை

கருவிலேயே தந்தாய்.


பசி என நான் அழும் முன்

பால் தருபவள் நீ,




வலி என நான் சொல்லும் முன்

வலி உணர்பவள் நீ.


தெய்வங்கள் எல்லாம்

கோவிலில் இருக்க,


என் தெய்வம் மட்டும்

வீட்டில் இருக்கிறது -


அது நீ தான் அம்மா.


(தனலட்சுமி, எம்காம் பிஎட், சூரியா சர்வதேச மேல்நிலைப்பள்ளி, முத்தியால்பேட், புதுச்சேரி)