இல்லற இன்பத்தின் விளக்காம்.. இல்லத்தரசிகள்!!

Su.tha Arivalagan
Nov 03, 2026,04:56 PM IST

- புலவர் ப.ஈஸ்வரநாதன், துபாய்


மண்ணின் பெருமையைச் சொல்லிடும் பெண்மையின் பிறப்பாம்

இல்லத்தை ஒளியாக்கும் இல்லற இன்பத்தின் விளக்காம்


பொறுமையின் இலக்கணமாம் படைப்பில் மகத்தான  சக்தியாம்

உலகையே உருவாக்கும் உன்னத படைப்பின் சிகரமாம்


மடமையை கொளுத்திட மங்கையராய்ப் பிறந்து வந்தவளாம்


தனித்துவம் உணரவே 

தரணியும் போற்றிடவே

ஆள்பவளாம்




சமமான உரிமையில்

சாகசங்கள் புரிந்த சகலகலாவல்லியாம்


சமூகத்தில் சமத்துவம் சகலோர்க்கும் வேண்டியே வாழ்பவளாம்


(புலவர் ப.ஈஸ்வரநாதன். சென்னை. தமிழ் இலக்கியம் பயின்று  பி.லிட் பட்டம் பெற்றவர். இலக்கிய பற்றாளர், பேச்சாளர். கவிஞர். பல இலக்கிய மன்றத்தில் நடுவர் மற்றும் நெறியாளர்.)