Tamil Poem: போரிட்டே வென்றிடு
Jul 04, 2026,03:41 PM IST
- புலவர் பா. ஈஸ்வரநாதன்
இயற்கையின் அழகு
ரசித்ததோ மனது...
விபத்தாய் வந்ததே
விதியும் சதியானதே...
புயலாய் மழையாய்
இம்சையாய் தொடருதே...
பாமர மக்களின் அவலமும் அதிகமாகுதே...
தொடரும் சோகமே நிலைத்தே நிக்குதே...
வறுமையில் பசியே
பதறுது நெஞ்சமே...
சுதந்திர தாகம்
இன்றும் தீரலையே
சிந்தித்தே மனதுமே
சிறைப்பட்டது இருட்டினிலே....
சிறகை விரித்து
வானில் பறந்திடவே
மனம் உடைந்தாலும்
தொடரும் பயணமே...
அறத்தின் பாதையிலே
போரிட்டே வென்றிடுவோம்...
துயரம் துடைத்திடவே
நாமும் புறப்படுவோம்.
(புலவர் ப.ஈஸ்வரநாதன். சென்னை. தமிழ் இலக்கியம் பயின்று பி.லிட் பட்டம் பெற்றவர். இலக்கிய பற்றாளர், பேச்சாளர். கவிஞர். பல இலக்கிய மன்றத்தில் நடுவர். மற்றும் நெறியாளர்)