Tamil Poem: புதிய விடியல்

Su.tha Arivalagan
Jul 08, 2026,04:12 PM IST

- புலவர். ப.ஈஸ்வரநாதன்


சிந்திய உழைப்பால்           

உயர்வேஅடைந்திடு


சிந்தனை  செய்தே       

சிறப்பாய்வாழ்ந்திடு


அன்பை பெருக்கியே

ஆதரவு தந்திடு


ஒற்றுமை உணர்ந்து    

உலகம் சிறந்திடு ...  




உழைப்பை நம்பியே 

சிகரம் தொட்டிடு .


உள்ளம்  சிறக்க         

உயர்ந்து வாழ்ந்திடு


பஞ்சம் தீர்ந்திடவே

விவசாயம் காத்திடு


பசியும்   பட்டினியும்

ஒழிக்க போராடிடு 


அளவாய்  உறங்கிடு 

அனலாய்  கிளம்பிடு


திறமை வளர்த்தே 

தாயகம் காத்திடு ...  


புதியென புதியதாக

பிறக்கட்டும் விடியலாக


இயற்கை வளமாக 

இரவும் விடியட்டுமே ..


(புலவர் ப.ஈஸ்வரநாதன். சென்னை. தமிழ் இலக்கியம் பயின்று பி.லிட் பட்டம் பெற்றவர். இலக்கிய பற்றாளர், பேச்சாளர். கவிஞர். பல இலக்கிய மன்றத்தில் நடுவர். மற்றும் நெறியாளர்)