புயலில் மலரும் பூக்கள்.. சாதனை எழுத்தாளர் கோ. லதாவுக்கு சென்னையில் பாராட்டு!
Apr 07, 2026,06:33 PM IST
- முனைவர் கோ. லதா
MWRH. AMB. DR. G. லதா அவர்கள் எழுதிய புயலில் மலரும் பூக்கள் என்னும் கவிதை நூலுக்கு உலக சாதனை விருது வழங்கப்பட்டது. இந்த நூல் இவர் எழுதிய மூன்றாவது நூலாகும். இந்த நூலில் 425 கவிதைகளும் 322 பக்கங்களும் இடம்பெற்றுள்ளது இந்த 425 கவிதையை 96 மணி நேரத்தில் எழுதி முடித்தது பியூசபெல்லர்ஸ் இன்டர்நேஷனல் புக் ஆஃப் ரெகார்ட்சில் உலக சாதனையாக பதிவிடப்பட்டது.
மேலும் இவர் எழுதிய நான்காம் கவிதை நூலான வரலாற்று கீதங்கள் என்னும் நூலில் 225 கவிதைகளும் 200 பக்கங்களும் இடம்பெற்று 48 மணி நேரத்தில் கவிதைகளை எழுதியது பியூசபெல்லர்ஸ் இன்டர்நேஷனல் புக் ஆஃப் ரெக்கார்ட் நிறுவனர் Dr. Amb.சித்ரா மை கண்காணித்து உலக சாதனையாக பதிவிட்டார்.
8 மாதங்களில் எட்டு நூல்கள் எழுதி வெளியிட்டதை பாராட்டி சிறந்த எழுத்தாளர் விருது பியூசுபல்லர்ஸ் இன்டர்நேஷனல் புக் ஆப் வேர்ல்டு ரெக்கார்டில் இருந்து வழங்கப்பட்டது. மேலும் ஐ வி ஐ ஸ்டுடியோ முகப்பேரில் உலக சாதனை நூல் 2025 வெளியிடப்பட்டது இதில் மூன்று பக்கங்களில் இவருடைய 20 உலக சாதனை நிகழ்வுகளும் தன் குறிப்பு என பதிவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
நூலை நிறுவனர் அவர்கள் வெளியிட புத்தகத்தை லதா அவர்கள் பெற்றுக் கொண்டார் . மேலும் ஐ வி ஐ ஸ்டுடியோ முகப்பேரில் நான்கு மணி அளவில் ஃபாஸ்டஸ்ட் ரெசிடெஷனாக மத்தேயு 5 6 7 மூன்று அதிகாரங்களையும் மலைப்பிரசங்கத்தை 9 நிமிடங்கள் மூன்று வினாடிகளிலே கூறியது முகநூலில் நேரலையாக பதிவிடப்பட்டது. இது உலக சாதனை நூலில் பதிவிடப்பட்டு உலக சாதனை சான்றிதழும் வழங்கப்பட்டது.
இவரது அடுத்தடுத்த திறமைகளைப் பாராட்டி பெஸ்ட் வுமன் அச்சீவர் 2026 விருதுக் கேடயம் வழங்கப்பட்டது. நான்கு உலக சாதனைகளும் ஒரு விருது கேடயமும் நிறுவனர் டாக்டர் சித்திராமை, Amb.பூர்ணிமா அட்ஜூடிகேட்டர் , டாக்டர் சாலமோன் தினேஷ் எக்ஸிக்யூட்டிவ் டைரக்டர், சுகன்யா கவின் கல்லூரி பிரின்ஸ்பல், தயா வானவில் டிவி ஆங்கர் வழங்கி கௌரவப்படுத்தினர். இதற்கு கல்வியாளர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆசிரியர் லதாவிற்கு நான்கு உலக சாதனை விருதுகளும் ஒரு விருது கேடயமும் வழங்கப்பட்டது.
(பாரத் சேவா ரத்னா. டாக்டர். கோ. லதா, கல்வித் தூதர், பன்முக உலக சாதனையாளர், தமிழக அரசின் நல்லாசிரியர் விருதாளர், சென்னை)