திருவேல் முருகனுக்கு அரோகரா.. ஞானவேல் முருகனுக்கு அரோகரா

Su.tha Arivalagan
Nov 02, 2026,05:16 PM IST

- ரா. ஜெயலலிதா


முருகனுக்கு அரோகரா 

திருவேல் முருகனுக்கு அரோகரா 

ஞானவேல் முருகனுக்கு அரோகரா

திருப்புகழ் நாதனுக்கு அரோகரா 

முருகா சரணம் 


புண்ணியம் செய்தாய் புனிதவதி 

போராடி நாங்கள் வெளியில் வந்தோம் 

தலங்கள் தோறுமே சென்றிருந்தோம் 

திருப்புகழை நாங்கள் பாடி வந்தோம் 

தலங்கள் தோறுமே சென்று இருந்தோம் 

திருப்புகழை நாங்கள் பாடி வந்தோம் 


வேலனை பாடினால் 

வேதனை தீர்ந்திடும் 

கந்தன் புகழையே பாடினோம் 

கவலைகள் தீர்ந்திடவே கூடினோம் 

கந்தன் புகழையே பாடினோம் 

கவலைகள் தீர்ந்திடவே கூடினோம் 




புண்ணியம் செய்தாய் புனிதவதி 

போராடி நாங்கள் வெளியில் வந்தோம் 

தலங்கள் தோறுமே சென்றிருந்தோம் 

திருப்புகழை நாங்கள் பாடி வந்தோம்

புத்தகம் அச்சிட்டோம் புகழை பாடினோம் 

கந்தன் திருவடியை நாடினோம் சேவடி வணங்கிடவே கூடினோம் 

கந்தன் திருவடியை நாடினோம் சேவடி வணங்கிடவே கூடினோம்


திருநெடுங்கலம் பழனியில் திருப்புகழ் பாடினோம் 

எட்டுக்குடி வேலவனே அரோகரா அரோகரா 

புலவாச்சேரி முருகனே அரோகரா 

எட்டுக்குடி வேலனே அரோகரா 

புலவாச்சேரி முருகனே அரோகரா


என்கண் குமரனே சிக்கல் வேலனே 

குறைகள் போக்கிடவே ஓடிவா 

குடும்பத்தை காத்திடவே நாடிவா 

எங்கள் குடும்பத்தை காத்திடவே நாடிவா 


புண்ணியம் செய்தோம் புனிதவதி 

போராடி நாங்கள் வெளியில் வந்தோம் 

தலங்கள் தோறுமே சென்றிருந்தோம் 

திருப்புகழை நாங்கள் பாடி வந்தோம் 


எங்கள் சேவை தொடர்ந்திட வேண்டும் 

கந்தா உன் அருளை தர வேண்டும் 

கவலை இல்லாத வரம் வேண்டும் 

திருப்புகழ் அமிழ்தத்தை பாடுவோம் 

திருவாசகத் தேனை பருகிடுவோம் 

திருப்புகழ் அமிழ்தத்தை பாடுவோம்

திருவாசகத் தேனை பருகிடுவோம் 


நானிலம் செழித்திடவே நன்மைகள் நடந்திடவே 

சக்தியின் மைந்தா நீ வரவேண்டும்

சங்கடம் தீர்த்திடவே வரம் வேண்டும் 

சக்தியின் மைந்தா நீ வரவேண்டும்

சங்கடம் தீர்த்திடவே வரம் வேண்டும் 


விராலிமலை முருகனே வினைகளை அழிப்பவனே

வேதனை தீர்த்திடவே வரவேண்டும் 

எங்கள் வேண்டுதல் நிறைவேற வரம் வேண்டும் 

வேதனை தீர்த்திடவே வரவேண்டும் 

எங்கள் வேண்டுதல் நிறைவேற வரம் வேண்டும்


புண்ணியம் செய்தாய் புனிதவதி 

போராடி நாங்கள் வெளியில் வந்தோம் 

தலங்கள் தோறுமே சென்றிருந்தோம் 

திருப்புகழை நாங்கள் பாடி வந்தோம்

வேலனை பாடினால் வேதனை தீர்ந்திடும் 

கந்தன் புகழையே பாடினோம்

கவலைகள் தீர்ந்திடவே கூடினோம் 

கந்தன் புகழையே பாடினோம் 

கவலைகள் தீர்ந்திடவே கூடினோம் 


புண்ணியம் செய்தாய் புனிதவதி 

போராடி நாங்கள் வெளியில் வந்தோம் 

தலங்கள் தோறுமே சென்றிருந்தோம் 

திருப்புகழை நாங்கள் பாடி வந்தோம் 

திருப்புகழை நாங்கள் பாடி வந்தோம் 


(கவிஞர் ரா.ஜெயலலிதா தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் ஊரைச் சேர்ந்தவர். கவிஞராக மட்டுமல்லாமல் பாடலாசிரியராக, பாடகராக, ஆன்மீகக் காவலராக வலம் வருகிறார்)