ஏன் இப்படி?
Mar 31, 2026,03:27 PM IST
- ஆர்.உமா
இப்படி செய்தேன்,
ஏன் அப்படி செய்யவில்லை?
எனக் கேட்கின்றனர்.
அப்படி செய்தேன்,
ஏன் இப்படி செய்யவில்லை?
எனக் கேட்கின்றனர்.
இப்படித்தான் செய்ய வேண்டும் என
நினைத்தால் - இல்லை
அப்படித்தான் நினைப்பேன் என்றும்
அப்படித்தான் செய்ய வேண்டும் என
நினைத்தால் - இல்லை
இப்படித்தான் நினைப்பேன் என்றும்....
எப்படித்தான் செய்தாலும்
ஏன் இப்படி அப்படி செய்யவில்லை
எனக் கேட்கும் மனிதர்களை......
இப்படியும் சொல்ல முடியாமல்
அப்படியும் சொல்ல முடியாமல்
மனதில் மட்டும் ஒரு -
கேள்வி குரல் எழுகிறது - இவர்கள்
ஏன் இப்படி என்று?
(ஆர். உமா, ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, பாணவேடுதோட்டம்)