பஹல்காம் தாக்குதல்: பெற்றோரை இழந்த 22 குழந்தைகளை தத்தெடுக்க ராகுல்காந்தி முடிவு!

Meenakshi
Jul 29, 2025,05:05 PM IST

டெல்லி: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் பெற்றோரை இழந்த 22 குழந்தைகளை தத்தெடுக்க எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி முடிவு செய்துள்ளார். 


ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பஹல்காமில் கடந்த ஏப்ரல் மாதத்தில் சுற்றுலா பயணிகள் மீது திடீரென்று பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் சுமார் 26 சுற்றுலா பயணிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 60க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.




இதனையடுத்து, பாகிஸ்தான் தாக்குதலுக்கு பாகிஸ்தான் மற்றும் அதன் பயங்கரவாத அமைப்புகளுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்தது. கடந்த மே மாதம் 7 ஆம் தேதி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள முகாம்களை குறிவைத்து இந்திய ராணுவம் எல்லை தாண்டி பயங்கரவாதிகள் மீது வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதில் 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டது. மேலும் இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தானும் பதில் தாக்குதல் நடத்தியது. இதனால் இந்தியா பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டது.


ஒரு கட்டத்தில் சர்வதேச நாடுகளின் பேச்சு வார்த்தை நடத்தி காரணத்தால், இந்தியா பாகிஸ்தான் இடையேயான பிரச்சனை முடிவுக்கு வந்தது. இதனையடுத்து ராகுல்காந்தி ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்துக்கு சென்று பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.


 இந்நிலையில், இந்தியா-பாகிஸ்தான் மோதலின் போது பெற்றோரை இழந்த கிட்டத்தட்ட 22 குழந்தைகளை தத்தெடுக்க எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி முடிவு செய்துள்ளார். இது குறித்து ஜம்மு-காஷ்மீர் காங்கிரஸ் தலைவர் தாரிக் ஹமீத் கர்ராவின் பேசுகையில், பாகிஸ்தான் பயங்கரவாத தாக்குதலில் பெற்றோர் இருவரையும் அல்லது குடும்பத்தின் ஒரே குடும்பத்தை ஆதரிப்பவரையும் இழந்த பூஞ்சில் 22 குழந்தைகளின் கல்விச் செலவுகளை ராகுல்காந்தி ஏற்றுக்கொள்வார்.குழந்தைகள் தங்கள் படிப்பைத் தொடர உதவும் வகையில், உதவியின் முதல் தவணை புதன்கிழமை வெளியிடப்படும். இந்த குழந்தைகள் பட்டம் பெறும் வரை உதவி தொடரும் என்று தெரிவித்துள்ளார்.