மழை

Su.tha Arivalagan
Nov 03, 2026,11:48 AM IST

- கவிஞர் கண்ணகி அண்ணாதுரை


மண்ணின் தாகம் தீர்க்கவே 

வானிலை இயல்பாய் பொழிந்தது!

 

காடுகள் செழித்தே வளர்ந்தன; 

விவசாயிகள் மகிழ்ந்தே வாழ்ந்தனரே!

 

இன்று ஏனோ!? 




தொழிநுட்ப வளர்ச்சியின் மோகத்தால் 

அவசரயுகத்தின் வேகத்தால்

இயற்கையைத் தன்வசம்போல்

ஆட்டுவிக்க முயன்றனரே!


அதன் விளைவு...


இன்று மண்ணின் தாகம் மட்டுமல்ல 

மனிதனின் தாகமும் தீர்க்க முடியாத 

நோயாய் மாறிவிட்டதே! 


(கவிஞர் கண்ணகி அண்ணாதுரை, சிங்காரச் சென்னையில் வசித்து வருபவர்)