47 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்து நடிக்கும் கமல்ஹாசன் - ரஜினிகாந்த்!
Feb 21, 2026,04:16 PM IST
சென்னை: ரஜினி, கமல் நடிக்கும் புதிய படத்தின் புரோமோ வீடியோ வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
தமிழ் திரையுலகின் இரு துருவங்களான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் இருவரும் சுமார் 47 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒரு படத்தில் இணைந்து நடிக்கவுள்ள செய்தி இன்று (பிப்ரவரி 21, 2026) அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது. கடந்த பிப்ரவரி 19ம் தேதி ரெட் ஜெயண்ட் மூவிஸ் (Red Giant Movies) நிறுவனம் ஒரு ரெட்ரோ ஸ்டைல் போஸ்டரை வெளியிட்டு இந்த அறிவிப்பை வெளியிட்டிருந்த நிலையில், . இன்று (பிப்ரவரி 21) இதற்கான அதிகாரப்பூர்வ புரொமோ வீடியோ வெளியாகியுள்ளது.
இந்த படத்திற்கு தற்காலிகமாக KH x RK என்று அழைக்கப்படும் இப்படத்தை, 'ஜெயிலர்' புகழ் நெல்சன் திலீப்குமார் இயக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கின்றன. இப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார்.
ரஜினி மற்றும் கமல் கடைசியாக இவர்கள் இருவரும் இணைந்து அலாவூதினும் அற்புத விளக்கும், நினைத்தாலே இனிக்கும் என்ற படத்தில் நடித்திருந்தனர். இந்த இரண்டு படங்களும் 1979ம் ஆண்டு ஏப்ரல் 14ல் தான் ரிலீஸ் செய்யப்பட்டது. அதன் பிறகு, தங்கள் கேரியரில் ஒருமித்த வளர்ச்சியை அடைய வேண்டும் என்பதற்காகவும், தயாரிப்பாளர்களின் நலன் கருதியும் இனி தனித்தனியாக நடிப்பது என இருவரும் இணைந்து முடிவெடுத்தனர். தற்போது கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுக்குப் பிறகு இந்த மெகா கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது.
இன்று வெளியான போஸ்டரில் ஒரு பழைய மாடல் மெர்சிடிஸ் பென்ஸ் கார் இடம்பெற்றுள்ளது. இதன் மூலம் படம் ஒரு விண்டேஜ் ஆக்ஷன் டிராமாவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படம் 2027 பொங்கல் பண்டிகைக்கு திரைக்கு வர வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.