கூலியைத் தொடர்ந்து.. மீண்டும் ரஜினிகாந்த்துடன் இணையும் லோகேஷ் கனகராஜ்.. பார்ட் 2 இல்லை!
சென்னை: லோகேஷ் கனகராஜ் மற்றும் ரஜினிகாந்த் மீண்டும் இணையவுள்ளனர். ஆனால் இது கூலி 2.0 கிடையாது. இது முற்றிலும் புதிய கதை. புதிய கதாபாத்திரங்கள் மற்றும் தனித்துவமான கதை அம்சத்துடன் இருக்கும். தற்போதுள்ள கூட்டணியிலிருந்து இது மாறுபட்டதாக இருக்குமாம்.
கூலி படத்தை தற்போது ரஜினிகாந்த்தை வைத்து இயக்கியுள்ளார் லோகேஷ் கனகராஜ். இது அவரது எல்சியூவில் வராதாம். ரஜினிக்காவே பிரத்யேகமாக எழுதப்பட்ட கதையாம் கூலி. ஆகஸ்ட் 14ம் தேதி படம் திரைக்கு வருகிறது. ஏற்கனவே சில பாடல்கள் வெளியாகி வைரலாகியுள்ளன. ஆடியோ வெளியீட்டு விழாவும் நடைபெறவுள்ளது.
இந்த நிலையில் மீண்டும் ரஜினியுடன் இணையப் போகிறாராம் லோகேஷ் கனகராஜ். இதுதொடர்பாக அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், ரஜினி சாருடன் நான் பேசிக்கொண்டிருக்கிறேன். நாங்கள் மீண்டும் இணைந்து பணியாற்றினால், அது வித்தியாசமாக இருக்கும். ஒரு புது யுனிவர்ஸை உருவாக்குவோம். இந்த படத்தில் நடக்கும் விஷயங்கள் அதற்கேற்ப எழுதப்பட்டுள்ளன. இது ஒரு தனித்துவமான படம். இதன் கதை இத்துடன் முடிவடைகிறது. அவருடன் எதையும் செய்ய நான் தயாராக இருக்கிறேன். அவர் என்னை அழைத்தால், நான் நிச்சயமாக செய்வேன். அவருடன் பணியாற்ற எனக்கு ஆசை இருக்கிறது.
கூலி படத்தை பார்த்த பிறகு, இன்னொரு படம் பண்ணலாம்னு பேசினோம். ஆனால் காலக்கெடு பற்றி உறுதியாக தெரியவில்லை. நாங்கள் இருவரும் மீண்டும் இணைந்து பணியாற்ற விரும்புகிறோம் என்றார் லோகேஷ்.
கூலி திரைப்படத்தில் ரஜினிகாந்த், ஸ்ருதி ஹாசன், நாகார்ஜுனா, உபேந்திரா, சௌபின் ஷாகிர், சத்யராஜ், ரெபா மோனிகா ஜான், ஜூனியர் எம்.ஜி.ஆர், மோனிஷா பிளஸ்ஸி மற்றும் காளி வெங்கட் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.