முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில்.. கமல்ஹாசன், திமுக வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல்
சென்னை: திமுக கூட்டணியின் ராஜ்யசபா தேர்தல் வேட்பாளர்கள் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தனர். மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் கமல்ஹாசன் போட்டியிடுகிறார்.
தமிழ்நாட்டிலிருந்து 6 ராஜ்யசபா எம்.பி. பதவியிடங்கள் காலியாகின்றன. இதில் திமுக கூட்டணிக்கு 4 இடங்களும், அதிமுகவுக்கு 2 இடங்களும் கிடைக்கும். அந்த வகையில் திமுக சார்பில் பி.வில்சன், கவிஞர் சல்மா, சிவலிங்கம் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டன. கூட்டணிக் கட்சிகள் வரிசையில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் கமல்ஹாசனுக்கு சீட் அளிக்கப்பட்டது.
அதிமுக சார்பில் வழக்கறிஞர்கள் இன்பதுரை மற்றும் தனபால் ஆகியோருக்கு சீட் தரப்பட்டுள்ளது.
திமுக வேட்பாளர்கள் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தனர். கமல்ஹாசனும் இன்றே வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், திருமாவளவன், வைகோ உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் இந்த நிகழ்வின்போது உடன் இருந்தனர்.
சட்டசபை கூடுதல் செயலாளர் சுப்பிரமணியத்திடம் அனைவரும் தங்களது வேட்புமனுக்களை வழங்கினர்.