உன் புன்னகை!
Jan 24, 2026,01:23 PM IST
- கபிசப்ரி தென்றல், தென்காசி
எங்கே பெற்றாய்
புன்னகை
என்னை இதயத்திற்குள்
அடக்கி விட்டாய்
அடக்கமான புன்னகையால்.....
ஆதவன் கண்ட
தாமரைப் போல
உந்தன் புன்னகையால்
மலரும்
என் மனம்.....
காண தவித்தேனே அம்மா
அவ்வப்போது நீ
மறைத்து வைத்த
புன்னகையை.......
புன்னகை புரிந்தாயே...
இறைவனிடம்
மன்றாடினேனே
நொடிக்கு நொடி
உன் புன்னகை காண.....
காண தவம் கிடந்த
என்னிடம்
உந்தன் இறுதி புன்னகையை
கனவாகவே விட்டு
சென்று விட்டாயே அம்மா.....
எங்கே பெற்று
எங்கே விட்டு
சென்றாயோ
நின் புன்னகையை!