இப்பூலோகமே கொண்டாடும் பெண்மை வாழ்க!
Jan 24, 2026,04:37 PM IST
- கவிசப்ரி தென்றல், தென்காசி
பெண் என்றால் மென்மை
மென்மைக்குள் ஓர் வலிமை
வலிமைக்குள் ஓர் தன்மை
தன்மைக்குள் ஓர் தூய்மை
தூய்மைக்குள் ஓர் வெண்மை
வெண்மைக்குள் ஓர் வாய்மை
வாய்மைக்குள் ஓர் மெய்மை
மெய்மைக்குள் ஓர் ஒளிமயம்
ஒளிமயத்திற்குள் ஓர் தாய்மை
தாய்மைக்குள் ஓர் பொறுமை
பொறுமைக்குள் ஓர் கடமை
கடமைக்குள் ஓர் உரிமை
உரிமைக்குள் ஓர் தெளிவு
தெளிவுக்குள் ஓர் பெண்மை...
பெண்மை இவ்வுலகிற்கே நன்மை .....
இப்பூலோகமே கொண்டாடும்
பெண்மை வாழ்க!