புதன் சிந்தனை... எதிர்ப்பார்ப்பின்றி மலர்கின்ற உறவே அழகான புரிதலின் உச்சம்
- "சொல்லருவி" ரஞ்சிதா மணியரசன்
எவ்வளவுதான் அன்பு செலுத்தினாலும் உங்களின்அன்பானவர்கள் உங்களை புரிஞ்சிக்கிறதே இல்லையா...
புரியாதவர்கள் மத்தியில் இருந்து புலம்பித் திரிவதைவிட அவர்களை அப்படியே விட்டு விலகி நில்லுங்கள். அவர்களை ஒருபோதும் உதவிக்கோ அன்புக்கோ நாடாதீர்கள்..
அதற்காக கோபம் கொள்ள வேண்டாம்.
சிரித்த முகத்துடன் அனுதினமும் பார்த்தும் பார்க்காமல் இருங்களேன்.
அன்பை புரிந்து கொள்ளாதவர்கள், அவர்கள் நம்புகின்ற அதே அன்பாளர்கள், அவர்களை ஏமாற்றும் பொழுது உணர வாய்ப்புகள் உண்டு.
அப்போது உங்களுடைய அன்பின் மகத்துவம் புரிந்துக்கொள்வர்.
எப்போதும் ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் தோழமைகளே...
அன்பினால் எதையும் சாதிக்கமுடியும். அந்த அன்பினை மதிக்காதவர்களிடம் எந்த நிலையிலும் உங்களை நிரூபிக்க முயற்சி செய்யாதீர்கள்.
நான் இதுதான், நான் இப்படிதான் அப்படின்னு உங்களை நீங்க நிரூபித்து வரும் அன்பு பொய்யானது, தேவையில்லாதது...
எந்தவித எதிர்ப்பார்ப்புமின்றி மலர்கின்ற உறவே அழகான புரிதலின் உச்சம்.
(ரஞ்சிதா மணியரசன், M.A.,B.Ed..,Eng, கவிஞர், ஆசிரியர், பாடகி என பன்முகம் கொண்ட படைப்பாளி, நாமக்கல்லைச் சேர்ந்தவர்)