குவளைத் தேநீர்
Nov 21, 2026,11:19 AM IST
- "சொல்லருவி" ரஞ்சிதா மணியரசன்
நிரம்பிய
தேநீர்குவளையால்,
சிறுபிள்ளையென
சுத்திச்சுத்தி
வலையவரும்
மனமானது...
குவளையை
கரங்களால்
கட்டியணைத்து,
அதைநாசிக்கருகில்
முத்தமிட
முயலுகையில்....
சூடான
காதலி, நிதானம்
என்பதை
அதட்டுவது போல்...
முதல்
மிடுக்கில்
அத்தனை பரவசம்...
முழு தேநீரின்
மொத்த சுவையின்
சொட்டுகளின்
கூட்டு...
அடுத்தடுத்து
விழுங்கையில்
வலிகளையும்,
கூடவே
கொஞ்சம், காயங்களையும்
அசைப்போடுகிறது....
முக்கால்
குவளைத்தேநீர்
தீர்ந்தவுடன்,
பெருமூச்செடுத்து
கொஞ்சத்தை
மட்டும்....
எனக்காக
பருகும்...
இறுதி
மிடறில்
அத்தனை ருசி
பரவசமாய்...
என்பதுபோல....!
(ரஞ்சிதா மணியரசன், M.A.,B.Ed..,Eng, கவிஞர், ஆசிரியர் என பன்முகம் கொண்ட படைப்பாளி, நாமக்கல்லைச் சேர்ந்தவர்)