சனிக்கிழமை தத்துவம்: புரளி பேசாதே!

Su.tha Arivalagan
Nov 28, 2026,01:00 PM IST

- "சொல்லருவி" ரஞ்சிதா மணியரசன்


யாருடா அது ? யாரப்பா சொல்றாங்க... அப்டினு திரும்பிப்திரும்பிப் பார்க்கும். 


ஹலோ, உங்களைத்தான் சொல்றேன் பா... நான்தான் உங்க மனசாட்சி. அவங்க அதப் பண்ணாங்க, இவங்க இதப்பண்ணாங்கனு எப்பப் பார்த்தாலும் மனசப்போட்டு ஏன் குடைஞ்சுக்கற... ஒன்னு புரிஞ்சிக்கோ.. இங்க யாரும் யாரைப்பற்றியும் நினைக்காம இல்ல நினைச்சாலும் அதப்பத்தி பொறாமைப் படாமலும் இல்ல... அவங்கவங்க அவங்க வேலைய அழகாப்பார்த்துட்டு இருக்காங்க....




நீ மட்டும் ஏன்பா மத்தவங்க வளர்ச்சியைப் பத்தியும், குறைகளைப் பத்தியும் தினமும் முணுமுணுத்துட்டு இருக்க..

சரி சரி இதனால உனக்கு வீணான மன உளைச்சல், அழுத்தம், நகங்களை வேற கடிச்சிக் கடிச்சி, துப்பிட்டே இருக்க... என்ன பண்றதுனே தெரியல. அதான் இன்னைக்கு உன்கூட பேசியே ஆகணும்னு வந்திருக்கேன்.


கொஞ்சம் காதைக் குடுத்து கேளு பா... அடுத்தவங்களுக்குக் கொடுக்கற முக்கியத்துவத்தை உன்னோட வளர்ச்சியில் காட்டினால், நீ எவ்வளவு பெரிய தரத்துக்கு உயர்ந்துக்கிட்டே இருப்ப பா...


உன் வாழ்க்கையில் அழகான நேரத்தை அடுத்தவர்களின் திறமை அபகரிக்கப்படுகிறது... புரிந்துக்கொள். உன் தகுதியை... மதிப்புமிக்க மணித்துளிகளை உனக்காகச் செலவிடு ....!


உன் வாழ்க்கை அழகாகும்....!


(ரஞ்சிதா மணியரசன், M.A.,B.Ed..,Eng, கவிஞர், ஆசிரியர், பாடகி என பன்முகம் கொண்ட படைப்பாளி, நாமக்கல்லைச் சேர்ந்தவர்)