தனிமை!

Su.tha Arivalagan
Apr 30, 2026,10:58 AM IST

- ரதி தேவி


தனிமையில் இனிமை 

என்றால் மகிமை 


கடலில் தத்தளிக்கும் படகு போன்றது 

தனிமை..


தனிமையை தாங்கும் 

இதயம் வலிமை...


தனிமையில் கிடைப்பது வெறுமை


தனிமையை வென்றவனே 

மனவலிமை 

நிறைந்தவனே....


தனிமையை 

ஆக்கிரமிக்கிறது

தற்கால வலைதளம்..




உன்னதமான உறவை

துண்டிக்கின்றது 

தனிமை


உன்னை யார் 

என்று சிந்திக்க 

வைப்பதும்

தனிமையே ...


யார் தடுத்தாலும் 

தனிமை 

வரும் ஓர் நாள் 

உன்னை நீயே அறிய