Happy Deepavali.. நெடுந்தூர சொந்த ஊர் பயணம்!
Nov 08, 2026,10:58 AM IST
- ரதிதேவி
களைப்பிலும் சோர்வடைய தயாராக....
மண்ணின் வாசம்
எண்ணி எண்ணி
பயணம்...
மனதார துள்ளல் பயணம்..
சிக்புக் ரயில் வண்டியின்
இன்னிசை கச்சேரி
என ஓர் பயணம்........
அறிமுகம் இல்லா
முகங்களுடன்
ஓர் பயணம்....
ஏதோ அறிமுகம்
ஆனது போல ஓர்
புன்னகை....
பலவித மன ஓட்டங்களின்
இடையே ஓர் பயணம்....
இடையிடையே
விரும்பியும்
விரும்பாமலும்
புசிக்கும்
வழியோர
ஆகாரங்கள் .....
சின்ன சிறு
மழலைகளின்
சினுங்கலானஅழுகை
குரல்களோடு
ஓர் பயணம்
இமைகளை விழித்தும்
விழிக்காமலும்
அடையும் இடம் வரை
களைப்பிலும்
சோர்வடையாத
சொந்த ஊர் பயணம்.,....
நெடுந்தூர இரவு வண்டி பயணம்
தீபாவளி பயணங்களை மேற்கொண்டு
திளைக்கத் திளைக்கக் கொண்டாடி வரும்
அனைவருக்கும் தித்திக்கும் வாழ்த்துகள்