பத்திரமாக வைத்திரு மீண்டும் அனுப்ப!
Nov 12, 2026,04:52 PM IST
- ரதிதேவி
மதிமுகம் கண்ட தாமரை போன்றே
உன் முகம் காண...
மீண்டும் உன் வருகை
எந்தன் மனம் நெகிழ
ஏதோ புன்னகைத்தாய்
படபடக்கும்
பட்டாம்பூச்சி போல
என் இதயம்..
இதயத் திருடனே
எங்கே என் இதயம்
பத்திரமாக வைத்திரு
மீண்டும் அனுப்ப......
உனக்கென துடிக்கும்
ஓர் இதயம்..
உன்னையே காண
விரும்பும் விழிகள்....
நெஞ்சமே நேசிக்கும்
உன்னை
வந்து சேர்ந்து விடு
நேசிக்கும் இதயத்திற்குள்