சந்திக்க சில நொடிகள்!

Su.tha Arivalagan
Jan 31, 2026,05:22 PM IST

- ரதிதேவி


உந்தன் கரங்களுடன்

கரம் கோர்க்க சில நொடிகள்......


கோர்த்த கரங்களுக்கு 

இதழ் குவித்து 

முத்தமிட சில நொடிகள்....




தோள் மீது சாய்ந்து 

விழிகள் மூட 

சில நொடிகள்....


நெற்றி முகர்ந்து 

முத்தமிட சில நொடிகள்.....


கரம் கோர்த்து 

தென்றலோடு நடக்க

சில நொடிகள்....


இரு விழிகளும் இமைக்காமல் 

மோதிக் கொள்ள

சில நொடிகள்.....


உந்தன் மழலைச்

சிரிப்பில் 

எனை மறக்க 

சில நொடிகள்.....


தென்றல் மழைக் 

குடைக்குள் 

முகம் மலர

சில நொடிகள்.....


நின் மடியில் 

தலை வைத்து 

விழி மூட

சில நொடிகள்....


சில நொடிகளுக்குள்

வாழ்வின் யுகமே....!