நீயும் ஒரு குழந்தையாக!
Nov 14, 2026,03:02 PM IST
- ரதிதேவி
என் மடி சாயும் போது
உன் மயிர் கோதி
நெற்றி முகர்ந்து முத்தம் இடும் போது
நீயும் ஓர் குழந்தையாக..
பணிக்கு செல்லும் போது
பள்ளி செல்ல மறுக்கும் குழந்தை போல
உந்தன் முகம்....
பணி முடிந்து
வருகையில்
உன்னை அணைத்து
முத்தம் இட்டு
முகச்சோர்வை
களையும் போது
நீயும் ஓர் குழந்தையாக......
நீ புசித்தவற்றை
எனக்கும் கொடுத்து
உண்ணும் போது
நீயும் நானும் ஓர் குழந்தைகளாக...
உந்தன் கரம் பற்றி
அணைக்கும் போது
நானும் ஓர் குழந்தையாக..
துணைவருக்கு!