நீ தொழிலுக்காக அரசியல் பண்றவன்.. நான் அரசியலையே தொழிலா பண்றவன்...கராத்தே பாபு பட டீசர் வெளியீடு!
சென்னை: நடிகர் ரவி மோகன் நடிப்பில் உருவாகியுள்ள கராத்தே பாபு படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ரவி மோகன். ஆரம்பத்தில் இருந்தே வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போது கணேஷ் கே பாபு இயக்கத்தில் 'கராத்தே பாபு' என்ற படத்தில் நடித்துள்ளார் ரவி மோகன்.
கராத்தே பாபு படத்தை ஸ்கிரீன் சீன் மீடியா தயாரிப்பில் டாடா பட இயக்குனர் கணேஷ் கே பாபு இயக்குகிறார். சாம் சி எஸ் இப்படத்திற்கு இசையமைக்கிறார். ஜெயம் ரவியுடன் சக்தி வாசுதேவன், காயத்ரி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து, வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது. இந்த நிலையில், கராத்தே பாபு படத்தின் டீசரை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. டீசரில் நீ உன் தொழிலுக்காக அரசியல் பண்றவன்... நான் அரசியலையே தொழிலா பண்றவன்... என்ற வசனம் தற்போதுள்ள அரசியல் சூழலில், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.