IPL 2026.. முதல் போட்டியிலேயே அனலைக் கக்கும் ஆர்சிபி.. பெங்களூரில் பறக்கும் தீப்பொறி!

Su.tha Arivalagan
Mar 28, 2026,07:57 PM IST

பெங்களூரு: ஐபிஎல் 2026 தொடரின் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதி வருகின்றன.


கிரிக்கெட் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஐபிஎல் 2026 சீசன் இன்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் தொடங்கியது. இன்றைய முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன.


போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணியின் கேப்டன் ரஜத் படிதார் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.




முன்னதாக கடந்த 2025 சீசனில் ஆர்சிபி அணி கோப்பையை வென்ற பின்னர் சின்னச்சாமி ஸ்டேடியத்தில் நடந்த வெற்றிக் கொண்டாட்ட நிகழ்ச்சியின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிரிழந்த ரசிகர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, ஆர்சிபி வீரர்கள் கையில் கருப்பு நிறப் பட்டை அணிந்து விளையாடுகின்றனர்.


ஆர்சிபி அணியை ரஜத் படிதார் வழிநடத்த, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு இஷான் கிஷன் தற்காலிக கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.


கடந்த சீசனில் சாம்பியன் பட்டம் வென்ற ஆர்சிபி, இந்த ஆண்டையும் வெற்றியுடன் தொடங்க முனைப்பு காட்டி வருகிறது. மறுபுறம் பலமான பேட்டிங் வரிசையைக் கொண்ட ஹைதராபாத் அணி ஆர்சிபிக்கு சவால் அளிக்கத் தயாராக உள்ளது.


இந்த விறுவிறுப்பான ஆட்டத்தில் விராட் கோலி மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோரின் அதிரடியைக் காண ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.