5 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட்.. சென்னை உள்பட 11 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு
சென்னை: தமிழ்நாட்டில் இன்று 5 மாவட்டங்களுக்கு அதி கன மழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை உள்பட 11 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையத் தகவல்கள் கூறுவதாவது:
ரெட் அலர்ட் மாவட்டங்கள் - புதுக்கோட்டை, தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர் மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் வீசும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை முதல் அதி கனமழையும், ஓரிரு இடங்களில் மிகத் தீவிரமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
ஆரஞ்சு அலர்ட் மாவட்டங்கள் - நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், கரூர், திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, காரைக்கால், திருவாரூர், நாகப்பட்டினம், விழுப்புரம் மற்றும் புதுச்சேரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிகக் கனமழை பெய்யக்கூடும்.
மஞ்சள் அலர்ட் - ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, விருதுநகர், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, தேனி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
மிதமான மழை மாவட்டங்கள் - தென்காசி, தூத்துக்குடி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும், ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மழையும் பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.