இன்ஜினியரிங் படிப்பில் சேர நாளை முதல் விண்ணப்ப பதிவு தொடக்கம்.. தொழிற்கல்வி இயக்குனரகம்!

Manjula Devi
May 06, 2025,04:56 PM IST

சென்னை: இன்ஜினியரிங் படிப்பில் சேர நாளை முதல் விண்ணப்ப பதிவு தொடங்கும் என  தொழிற்கல்வி இயக்குனராகம் தெரிவித்துள்ளது.


தமிழகத்தில் 2024-25 ஆம் கல்வி ஆண்டுக்கான பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 9 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இதனையடுத்து பொறியியல்  கல்லூரிகளில் உள்ள 1.60 லட்சம் இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. 


இந்த நிலையில் பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கான விண்ணப்பப் பதிவு நாளை தொடங்கும் என தொழிற்கல்வி இயக்குனராகம் தெரிவித்துள்ளது. 


அதன்படி, பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்ப பதிவு நாளை காலை 10 மணிக்கு  தொடங்கி ஜூன் ஆறு வரை நடைபெறும்.

www.tneaonline.org என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்  எனவும் தெரிவித்துள்ளது.




மேலும், +2 தேர்வு ரிசல்ட் மே 9ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், இதற்கான  தரவரிசை பட்டியல் ஜூலை 2ஆம் வாரம் வெளியிடப்படும் எனவும், இதற்கான கலந்தாய்வுகள் ஜூலை  இறுதியில் தொடங்கி செப்டம்பர் மாதத்திற்குள் முடிக்க இருப்பதாகவும் திட்டமிடப்பட்டுள்ளது.