சக்தி வாய்ந்த அகிம்சை போராளி.....!

Su.tha Arivalagan
Jan 30, 2026,04:08 PM IST

- கலைவாணி ராமு


நாட்டுக்காக தன்னையே அர்ப்பணித்துக்  கொண்ட ஆத்மா......

அல்லும் பகலும் இந்திய நாட்டிற்குபாடுபட்ட மகாத்மா...


போர்பந்தரில் பிறந்த இவரே 

சக்தி வாய்ந்த அகிம்சை போராளி.....

காந்தி என்னும் கருணை கடல் 

காற்றோடு கரைந்த நாள் ...

கருப்பு நாள் ....


நம் உள்ளம் என்னும் கோவிலில்

அமரராக குடி புகுந்த நாள்.....


பூரண சுயராஜ்யத்திற்கு வித்திட்டவர்

புவி உலகை  விட்டு பிரிந்த. நாள்....




கத்தி இன்றி ரத்தம் இன்றி

கருத்தை உணர்த்தியவர் 


கள்வனால் சுடப்பட்ட நாள்...

பெயருக்குத்தான் அவர் இறந்தார் -ஆனால் 

நம் அனைவர் உள்ளங்களிலும் 

இன்றும்.... என்றும்.... வாழ்ந்து கொண்டிருக்கும் 

நம் தாத்தாவின் வழிமுறைகளை 

பின்பற்றி வாழ்வதே நாம் அவருக்கு செய்யும் அஞ்சலி!