சகலருக்கும் கிட்டியது வாக்கினும் மாபெரும் பரிசு.. குடியரசு!

Su.tha Arivalagan
Jan 26, 2026,12:56 PM IST

- பா.பானுமதி


குடிமக்களை காக்க உண்டான அரசு 

தெருக்கோடியில் இருப்பவனையும் கொண்டாடும் அரசு 

சட்டத்தின் முன் அனைவரும் சமம் என பண்பாடும் அரசு 

சகலருக்கும் கிட்டியது வாக்கினும் மாபெரும் பரிசு 

குடியரசை பெற பட்ட பாடுகளும் பல தினுசு 

முடியரசை இறக்கி மூச்சு விட செய்தது பல சிரசு

கடமைகளையும் உரிமைகளையும் கொட்டி பாடும் முரசு 

சரியாய் பயன்படுத்தாமல் முறையின்றி போனால் ஆகிவிடும் தரிசு 

மாபெரும் இந்திய தாயின் மானத்தை காக்க வேண்டியது வாரிசு

உலகில் மிக உயர்ந்த மக்களாட்சி தத்துவம் சொல்லும் இந்திய குடியரசு 




இறையாண்மையை சமூக நீதியை 

இரு கண்களை கொள்வதே நீ தரும் பரிசு 

தனித்தன்மையை இந்த தரணிக்கு 

உணரச் செய்வதே மிகச் சிறந்த குடியரசு 

நேருவின் தலைமையில் அம்பேத்கரின் அருமையில் 

உண்டான சட்டமுறைமை 

ராஜேந்திர பிரசாத் குடியரசு தலைவர் ஆக்கி 

கொண்டாட்டங்கள் தொடங்கியது நம் குடியரசு 

மண்ணில் வாழும் வரை 

நல் நாட்டுப் பற்றுடன் வாழ்வதே நமக்கான குடி அரசு 

ஜெய்ஹிந்த்