குறுகியகால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் குறைப்பு: ரிசர்வ் வங்கி அறிவிப்பு!
Apr 09, 2025,02:21 PM IST
மும்பை: வங்கிகளின் குறுகியகால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது என்று ஆர்.பி.ஐ.கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார்.
வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடனுக்கு விதிக்கப்படும் வட்டி விகிதமே ரெப்போ வட்டி விகிதம். இந்த ரெப்போ வட்டி விகிதம் 2 மாதங்களுக்கு ஒருமுறை ரிசர்வ் வங்கி கூடி, ரெப்போ வட்டி விகிதம் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கும். கடந்த 5 ஆண்டுகளாக ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்படாமல் 6.5 சதவீதம் என்ற அளவில் இருந்து வந்த நிலையில் , கடந்த பிப்ரவரியில் 0.25 சதவீதம் குறைந்தது.
இந்நிலையில் இன்று ரெப்போ வட்டி விகிதத்தை மேலும் அரை சதவீதம் குறைத்துள்ளது ரிசர்வ் வங்கி. உணவுப்பொருள் விலை குறைந்திருப்பதால் பணவீக்கம் கட்டுக்குள் வரும் என்ற எதிர்பார்ப்பில் வட்டி விகிதத்தை குறைந்துள்ளது ரிசர்வ் வங்கி.