செய்தித் தாள்களின் புரட்சி!
Jan 29, 2026,05:12 PM IST
- தி.மீரா
அச்சில் பிறந்த ஒவ்வொரு எழுத்தும்
அறிவின் விதையாக மண்ணில் விழுந்தது.
மௌனமாக இருந்த சமூகத்தை
சிந்திக்க வைத்த சத்தமற்ற சங்கு அது.
அரண்மனை கதவுகளுக்குள் மறைந்த
அதிகார உண்மைகளை வெளிக்கொணர்ந்தது.
பாமரனின் கையில் அறிவை கொடுத்து
பயத்தைப் புரட்டிப் போட்டது.
காகிதத்தில் பதிந்த செய்தி
காலத்தைத் தாண்டி பயணித்தது.
ஊர்க் குரலை உலகிற்கு சொல்லி
ஒற்றுமையின் பாலம் கட்டியது.
அடக்குமுறைக்கு எதிராக
எழுத்தே ஆயுதம் ஆனது.
ரத்தம் சிந்தாமல் நடந்த
புரட்சி செய்தித் தாள் தான்.
தகவல் மட்டுமல்ல,
திசையும் தந்தது.
செய்தித் தாள் —
சமூகத்தை மாற்றிய
மௌனமான மகா புரட்சி
(ஈரோட்டைச் சேர்ந்த பாவலர் முனைவர் தி. மீரா, ஆசிரியர், தென்தமிழுக்காக கட்டுரைகள், கவிதைகள் படைத்து வருகிறார், கிரியேட்டிவ் எழுத்தாளர்)